யானைமுக கணபதியே

என்னென்ன பேறு பெற்றோம்,

எல்லாமே நாங்கள் பெற்றோம், 

எந்நாளும் பொன்னாளாக்கி 

தந்தாய் நீ கணபதியே,


தந்தங்கள் தாங்கி நீயே! 

தந்தாய் எம் கணபதியே!


அறிவு தந்து; ஆற்றல் தந்து; 

அனைவருக்கும் அன்பைத் தந்து; 

ஆதரிக்கும் தெய்வம் நீயே! 

யானை முக கணபதியே!


அன்னையிடம் பாசம் கொண்டாய்; 

தந்தையிடம் ஞானம் கொண்டாய்; 

தம்பியை தாங்கி நிற்கும்; 

தமையனாகி நின்றாய் அன்பாய்,


எல்லாமே சொல்லித் தந்து; 

எம்முடனே சேர்ந்து நின்று; 

எந்நாளும் காத்திருக்கும்' 

எங்கள் இல்லத் தெய்வம் ஆனாய்!


காத்திருந்து நோன்பிருந்து; 

கனிந்த நற்பழங்கள் தந்து; 

கரும்புடனே கொழுக்கட்டை கொண்டு; 


அன்புடனே அருகம்பில்லாள் 

ஆசையுடன் வணங்கி நிற்போம்,


ஆதரிப்பாய் எம்மையென்றும் 

யானைமுக கணபதியே! 


அன்புடனே தாள் பணிந்தோம் 

ஆதரிப்பாய் கணபதியே!

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்