அன்னை மகாலக்ஷ்மி
விடியும் காலை விளக்காக வெள்ளி கரத்தால் அருள் செய்வாள்,
கிழக்கு வானில் கண் திறந்து இரவு மறந்து விழித்திருந்தாள்,
எங்கள் மனதின் இருளகற்றி இறைவி என்றும் காத்திருப்பாள்,
ஒளியை தந்தவள் வழியாகி வாரி செல்வம் தந்திடுவாள்,
மலரின் மாலைகள் பல சூடி மங்கல நாயகி வீற்றிருப்பாள்,
மலர்ந்த முகத்தால் மகிழ்வூட்டி மகாலட்சுமி நமைக்காப்பாள்,
Comments
Post a Comment