குரு ராகவேந்திர
பூக்களின் குவியல் கீழே
புவியின் நாயகன் மேலே எங்கள்
புவியின் நாயகன் மேலே
கண்களின் முன் எங்கள் குருவே
காவிரி போல் ஒரு தெளிவே
கருணை மலையாய் உருவே
துயரினை போக்கவே வந்தான்
துங்க பத்ராவில் நின்றான்
தூய மந்திராலயம் தந்தான்
மணம் தரும் மாலையில் கண்டோம்
மகிழ்ச்சியை வாழ்வாய் கொண்டோம்
மந்திராலயத்தில் நின்றோம்
நாங்கள் மந்திராலயத்தில் நின்றோம்
மனதில் அமைதி கொண்டோம்
மண்ணில் விண்ணை கண்டோம்
Comments
Post a Comment