அன்னை தாயின் முகம்
எரியும் தீபம் காட்டும் முகம்
எங்கள் இதயம் கொண்ட முகம்,
செல்வம் தந்திடும் சிவந்த முகம்
செல்லமாய் காக்கும் தேவிமுகம்,
தாமரை பாதங்கள் கொண்ட முகம்
தாமரை யாய் மலர்ந்து நின்ற முகம்,
மலராய் மாலையாய் மலர்ந்த முகம்,
மனதில் நிறைந்து வாழும் முகம் ,
எல்லாம் எங்கள் தாயின் முகம்
என்றும் போற்றும் எங்கள் முகம்
Comments
Post a Comment