வடிவேலன்
மாலன் மருகன் வேலன் வருவான்
மயில் தன்னில் ஏறி எமைக் காக்க
மனதின் கவலையில் மயங்கிடும் கண்களை
கரம் கொண்டு துடைப்பான் உயிர் காக்க
வருவான் வருவான் வடிவேலன்
தருவான் ஆறுதல் ஞானவேலன்
அழகிய மாலைகள் தோள்களிலே
அற்புத ஆரங்கள் மார்பினிலே
வண்ண ஆடைகள் இடையினிலே
வடிவேலன் மயிலின் மடியினிலே
வருவான் வருவான் வடிவேலன்
தருவான் ஆறுதல் ஞானவேலன்
கரைந்திடும் துன்பங்கள் ஆற்றினிலே
கவலைகள் பறந்திடும் காற்றினிலே
விளைந்திடும் இன்பம் வாழ்வதிலே
வேலன் விழிதரும் தினமருளே
Comments
Post a Comment