சரணம் ஐயப்பா

இல்லாதவரும் கல்லாதவரும், 

இந்நாட்டவரும் எந்நாட்டவரும் ,

ஏங்கி நிற்பார் உனைக்காண,

இருமுடி கொள்வார் உனைக்காண,


சரணம் சரணம் ஐயப்பா 

சாமி சரணம் ஐயப்பா,


மனித வாழ்வாய் காத்திடவே 

மண்ணில் பிறந்த மாமணியே,

மாயனும் மாலனும் 

மனம் கொண்டு 

மண்ணில் விதைத்த பொன்விதையே,


சரணம் சரணம் ஐயப்பா,

சாமி சரணம் ஐயப்பா,


பால் வடியும் முகம் கொண்டாய் 

புலியின் பாலை நீ கொண்டாய்,

பல்லில் விடமது கொண்டவளை 

புவியை காக்க நீ கொன்றாய்,


சரணம் சரணம் ஐயப்பா, 

சாமி சரணம் ஐயப்பா,


பம்பையில் நனைந்து எழந்து வந்தோம்,

பாடியும் ஆடியும் ஏறி வந்தோம்,

பதினெட்டு படிகளில் ஏறி வந்தோம், 

பந்தம் சொந்தம் மறந்து வந்தோம்,


கண்கள் நனைந்து உன்னைக் கண்டோம் உடலின் உயிராய் உன்னைக் கொண்டோம்,,


சரணம் சரணம் ஐயப்பா,

சாமி சரணம் ஐயப்பா

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்