கணபதியே
அரசும் கரும்பும் அன்புடன் வைத்து ;
அழகு மாலைகள் சூட்டி மகிழ்ந்து;
இனிய பழங்கள் இயன்றதை வைத்து;
பாதம் பணிந்தோம் பாடி மகிழ்ந்தோம்
பரமன் மகன் முன் கூடி மகிழ்ந்தோம்
தடைகள் இல்லா பாதையை காட்டி ;
தயங்கும் மனதில் உற்சாக மூட்டி;
நம்பிக்கை வளர தும்பிக்கை காட்டி;
நாளும் காக்கும் நாயகன்முன்னே!
பாதம் பணிந்தோம் பாடி மகிழ்ந்தோம்
பரமன் மகன் முன் கூடி மகிழ்ந்தோம்
நாங்கள் வணங்கும் நாயகன் விநாயகன் நல்லருள் வேண்டி நன்மைகள் தேடி
பாதம் பணிந்தோம் பாடி மகிழ்ந்தோம்
பரமன் மகன் முன் கூடி மகிழ்ந்தோம்
Comments
Post a Comment