‌கணபதி

கண்ணை மூடி திறந்தாள் அங்கே 

காணும் தெய்வம் கணபதி தானே 


காட்சியில் எளிதாய் கருணை முகமாய் 

கண்முன் வருவதும் கணபதி தானே


மஞ்சள் பிடித்து வைத்தால் போதும் 

வந்து நிற்பவன் கணபதி தானே


மனிதர் வாழ்வின் தடைகள் நீக்கி 

மாநிலம் காப்பவன் கணபதி தானே 


அருகம் புல்லின் அற்புத சக்திகள் 

அறிந்தவன் தெளிந்தவன் கணபதி தானே 


அன்புடன் உடைத்திடும் தேங்காய் போதும் 

அற்புதம் செய்பவன் கணபதி தானே 


அழகன் குமரன் அண்ணன் எங்கள் 

ஆருயிர் தெய்வம் கணபதி தானே 


ஐந்து கரங்கள் கொண்ட கோமகன் 

கொஞ்சிடும் குழந்தை கணபதி தானே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்