குருவே ராகவேந்திரா
வானின் கிழக்கு வெளுத்தது பார் !
வர்ண ஜாலங்கள் செய்தது யார் ?
மனதின் இருளது மறைந்தது பார் !
மாயம் செய்த குருவும் யார்?
உயர்ந்த மலைபோல் உள்ளம் பார் !
உயர்ந்த வாழ்வதை தந்தது யார்?
கண்ணில் வழியும் காவிரி பார்!
காய்ந்த வாழ்வில் ஈரம் யார்?
துயரை துடைக்கும் கரங்கள் பார்!
துளசி மாலையில் தூயவன் யார்?
மத்வர் செய்த மாயம் பார்!
மண்ணைத் மருந்தாய் தந்தவன் யார்?
மந்திர ஆலயம் வந்து பார்!
மயக்கம் தீரும் குருவைப் பார் !
ராகம் தந்த கீதம் பார்!
ராகவேந்திர குருவைப் பார்!
ராகவேந்திரா! ராகவேந்திரா!
ராகவேந்திரா! ராகவேந்திரா!
Comments
Post a Comment