தடையை தடுப்பவன்

 

தடையை தகர்க்கும் தந்த முகமது,

தந்திடும் தந்திடும் சாந்தியை தந்திடும்,

கூர்வேல் குமரனை காத்த கரமது 

காத்திடும் காத்திடும் நம்மையும் காத்திடும்,


நித்திரை கலைந்த சித்திரை நாளில் 

கலைந்த கனவை நனவில் காட்டிடும் 

கண்ணில் பெருகும் நீரும் இனித்திடும்,


எங்கள் நாயகன் அன்பு விநாயகன் 

ஈசன் அம்மை தந்த தலைமகன் 

காட்சியில் மறையும் கண்ட துன்பங்கள்,


மலர்ந்த மாலையை தாங்கும் தோள்கள் 

மஞ்சள் குங்குமம் குளிர்ந்த சந்தனம் 

நெஞ்சில் நிறைந்தடும் நிம்மதி பிறந்திடும்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்