சிவாயம் சிவாயம் சிவாயம்
[18/04/2022, 2:56 pm] Ramkumar n:
சிவாயம் சிவாயம் சிவாயம்
சிவனே நமக்கு உபாயம்!
அபாயம் நீக்கும் சிவாயம்
அபயம் வேறில்லை சிவாயம்!
ஆதியே அந்தமே சிவாயம்
அருவின் உருவே சிவாயம்!
பிறையின் வடிவதில் சிவாயம்
பிறப்பின் இறப்பே சிவாயம்!
ஜோதியின் ஒளியில் சிவாயம்
சூரியன் நெற்றியில் சிவாயம்!
ஆடும் கால்களே சிவாயம்
ஆனந்த நடனம் சிவாயம்!
மேனியின் சாம்பல் சிவாலயம்
மீட்டிடும் உயிரை சிவாயம்!
கண்டத்தின் விடமே சிவாயம்
காட்டிடும் கருணையின் சிவாயம்!
நாகத்தின் மாலையில் சிவாயம்
நஞ்சையும் வென்றிடும் சிவாயம்!
பாடிடும் உடுக்கையும் சிவாயம்
பரமனின் மொழியாய் சிவாயம்!
புலியின் ஆடையில் சிவாலயம்
பூமியின் போர்வையாய் சிவாயம்!
வில்லனுடன் அம்புடன் சிவாயம்
வீர ருத்ரனே சிவாயம்!
கொண்டவள் சக்திக்கு சிவாயம்
கொடுத்ததே பாதியை சிவாயம்!
கையிலையின் வாழ்வாய் சிவாயம்
காத்திடும் உயிரே சிவாயம்!
என்றும் எங்கள் சிவாயம்
ஏங்கிடும் விழிகளில் சிவாயம்!
கண்களின் ஒளியாய் சிவாயம்
காட்டிடும் வழியை சிவாயம்!
அடியாய் முடியாய் சிவாயம்
அண்ணா மலையில் சிவாயம்!
உண்ணா முலையுடன் சிவாயம்
உறங்காத் தீயாய் சிவாயம்!
நால்வரின் தமிழாய் சிவாயம்
நான்மாட கூடலில் சிவாயம்!
கங்கையின் கனவாய் சிவாயம்
காசியின் கனவாய் சிவாயம்!
தில்லையில் கூத்தனாய் சிவாயம்
தேவாரப் பாடலில் சிவாயம்!
சிவாயம்!சிவாயம் சிவாயம்!
சிவனின்றி வேறில்லை உபாயம்!
Comments
Post a Comment