அன்னை சாமுண்டி
நீல வண்ண பட்டுடுத்தி
நிலத்தில் கண்கள் தனை நிறுத்தி
பார்க்கும் பார்வையில் பக்தர்களை
காக்கும் தாயே சாமுண்டி
மலைபோல் உயர்ந்த மன முடையாள்
மாலையும் மணிகளும் தான் உடையாள்
குன்றென நிமிர்ந்த குணமுடையாள்
மைசூர் தன்னில் நிலை கொண்டாள்
ஆதி சிவனின் நாயகியே
ஆடும் காவிரி தந்தவளே
அன்னை சாமுண்டீஸ்வரியே
அன்பால் உலகை காத்திடுவாய்
பார்க்கும் பார்வையில் கருமேகம்
பணிந்தே மழையாய் தான் இறங்கும்
வீசும் சூலம் தனைக் கொண்டே
சூழ்ந்திட்ட தீமையை விரட்டிடுவாய்
Comments
Post a Comment