அன்னை அபிராமி
தீராது உனை நாடி வந்தோம், துன்பம்
தீராது உனை நாடி வந்தோம்,
தீர்ந்த வினையாலே தீராத இன்பங்கள்
உன்னாலே கொண்டோம்,
உன்னாலே கொண்டோம் தாயே,
கண்ணாலே கண்டோம்,
அழகான புதுவாழ்வு தன்னை
அன்போடு அருளோடு கொண்டோம்,
அபிராமி உன்னாலே கொண்டோம், தாயே,
எந்நாளும் கண்டோம்,
மலர்மாலை தோள் கொண்டு நின்றாய்,
மனம் வாடா நிலைதந்து மகிழ்விங்கு தந்தாய்,
தாயே,மறுவாழ்வு தந்தெம்மை வென்றாய்,
கண்முன்னே கரம் காட்டி நின்றாய்
காணும் கண் முன்னே கனிவோடு
கனவாகி வந்தாய் தாயே,
கனவாகி நனவாகி காட்சிங்கு தந்தாய்,
அபிராமி நிலவாகி ஒளியாகி உயிராகி வந்தாய்
Comments
Post a Comment