அன்னை காளிகாம்பாள்
கையில் வாளொடு கண்ணில் தீயொடு கயவரின் தலைமிதிப்பாள்
சூலம் கொண்ட கரத்தினை உயர்த்தி படைதனை வென்றிடுவாள்,
ஆயிரம் கரம் கொண்டு யானையின் பலங்கொண்டு அதிசயம் புரிந்திடுவாள்
அன்புடன் ஏங்கும் பிள்ளைகள் துயரை அன்னை களைந்திடுவாள்,
களையும் துயரங்கள் காண்போம் விடுதலை காளி காத்திடுவாள்
காலமேகமாய் இடியாய் முழங்கி கருணை பொழிந்திடுவாள்,
காளி காத்திடுவாள் காளிகாம்பாள் காத்திடுவாள்
Comments
Post a Comment