அன்னை அபிராமி
கையில் நிலவை தாங்கி வந்தாள் அவள்
அன்னை அபிராமி
தகிக்கும் கனலை அனைக்க வந்தாள்
குளிர் நிலவென அபிராமி
சூலம் கையில் ஏந்தி வந்தாள்
சுடர் ஒளியென அபிராமி
சூழும் மேகமாய் இறங்கி வந்தாள்
இடி மின்னலாய் அபிராமி
கையில் மலரதை காட்டி நின்றாள்
அருள் வடிவாய் அபிராமி
காலம் அறிந்து கருணை செய்வாள்
எங்கள் காவல் அபிராமி
அன்னை அபிராமி
அருள் பார்வையில் அபிராமி
எம்மை அபிராமி
என்றும் காப்பவள் அபிராமி
Comments
Post a Comment