ஈசன் காட்சி எங்கும் ஒளியை தந்தது
எரியும் விளக்கில் எண்ணெய் நின்று எங்கும் ஒளியை தந்தது,
எங்கள் ஈசன் காட்சி கண்டு கண்கள் இமைக்க மறந்தது;
கரங்கள் ஒன்றாய் குவிந்தது,
நமசிவாய என்னும் நாமம் உதட்டில் ஓங்கி ஒலித்தது, நாவின் ஓசை செவியில் இறங்கி உயிரில் கலந்து நின்றது;
உண்மை உணர்ந்து கொண்டது,
ஈசன் தோள்கள் மாலையணிந்து இனிய கோலம் கொண்டது,
ஈடில்லாத இறைவன் கருணை இதயம் கொள்ளை கொண்டது;
எங்கும் ஒளியை தந்தது
Comments
Post a Comment