காலத்தை வென்ற காலபைரவர்
காலத்தை வென்று நிற்பார் கால பைரவர்;
காவலுக்கும் வந்து நிற்பார் காலபைரவர்,
அஷ்ட திக்கும் ஒளியானர் காலபைரவர்,
அஷ்டமியில் அருள் தருவார் காலபைரவர்,
எலும்பு மாலை அணிந்திருப்பார் ஈசன் காவலர்,
சூலம் மழு கரம் கொண்ட கால பைரவர்,
நடுநிசியில் உலவும் வீரர் நமது காவலர்;
நண்பகலாய் ஒளி தருவார் காலபைரவர்,
சனிப் பிணியில் நம்மை காப்பார் காலபைரவர்;
நல் லஷ்டமியில் நாம் வணங்கும் அஷ்ட பைரவர்
Comments
Post a Comment