கீதையை தந்தவன்

வான்போல் நிறம் கொண்ட வண்ணன்;

வாசலின் மண் தின்ற கண்ணன்,

வாயை திறந்தே அன்னையின் கண்களில் அகிலமும் காட்டிய மன்னன்;

நீல வண்ணன் கண்ணன்;

நெஞ்சில் நிலைத்த மன்னன்!


வேதம் நான்கிலும் வேராய் நின்றவன்;

வியாசன் வளர்த்த தீயாய் வாழ்ந்தவன்;

மண்ணைக் காக்க மானுடனாய் வந்து; 

மனதில் நிலைத்த மன்னன்!

மேக வர்ணன் கண்ணன்,

மாயங்கள் செய்த மன்னன்!


எரியும் தீபத்தின் ஒளியாய் ஆனவன்;

எல்லாம் அவனே!என்று நிலைத்தவன்,

வேண்டும் கரங்களின் தன்மை அறிந்தே; 

தன்னை தந்தவன் மன்னன்,


பார்த்தனின் சாரதி கண்ணன்; 

கீதை தந்தவன் மன்னன்!

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்