எளிய விநாயகன்
அரசின் மடியில் வேம்படி நிழலில்'
வினையை தீர்ப்பவன் வீற்றிருப்பான்;
விரைந்து கரங்கள் வணங்கி சென்றிட'
வேடிக்கையாய் நம்மை பார்த்திருப்பான்,
பிடித்த பிடியில் பிள்ளையார் ஆனவன்'
பிரியமுடன் நம்மை காத்தி ருப்பான்,
வேண்டும் எல்லாம் விரைந்து தருபவன்'
வேறு கோலமும் காட்டி நிற்பான்,
காணும் கண்களில் அதிசய மாய்'
காட்சியின் ஒளியாய் கரைந்து நிற்பான்'
வாமணன் காட்டிய வண்ணம் போல்'
மாமனின் மா உரு காட்டி நிற்பான்,
பத்து தலைகளும் பாசக் கரங்களும்'
பதினொன் றாய் அவன் முகம்காட்டும்,
எழுந்த இமயத்தின் பெருந் தோற்றம்'
எழும் இடையுடன் விலகி நின்றோடும்,
பாயும் குதிரைகள் பாய்ச்சல் எல்லாம்'
பாதத்தின் வலிமை பறைசாற்றும்,
ஆதியும் அந்தமும் காட்டி நிற்கும் '
ஆதிசேட னவன் அருட் குடையுடனே,
விடியும் காலை கதிரவன் போல்'
விரைந்து அருள்தரும் நாயகனே,
விஸ்வ ரூபமதில் உன்னை கண்டோம் '
எங்களின் எளிய விநாயகனே!
Comments
Post a Comment