குரு ராகவேந்திர

 கண்கள் காண்பது யார்?மனமே 

கருணையின் வடிவாய் காவியின் நிறமாய் கண்கள் காண்பது யார்?


உயிரின் புன்னகை பார் மனமே 

ஒளி தந்த முகமதில் உலகின் விடியலில் உயிரின் புன்னகை பார்!


நம்பிக்கை தந்தவன் நரசிம்ம கோலத்தை நம்மில் விதைத்தவன் மண்ணை மருந்தாய் மாற்றித் தந்தவன் 

மலர்ந்த முகமதைப் பார்!


தீமைகள் களைந்தவன் திருமால் பெருமையில் தினமும் திளைத்தவன் மூலராமனை இதயம் கொண்டவன் 

மந்திராலய மன்னன் முகமதைப் பார்!


எத்தனை அமைதி பார் அவன் இதயத்தின் கருணை பார் 

எல்லாம் தருபவன் 

என்றும் நிலைத்தவன் கண்களின் ஒளியைப் பார்!

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்