அன்னை சியாமளா
சிந்திக்க வைப்பாள் சியாமளா தேவி;
சிந்தனை வடிவம் சியாமளா தேவி,
கண்கள் காணும் அவள் தன் வடிவம்;
காண்போர் புண்ணியம் கருணையின் வடிவம்,
மாதவம் செய்தவள் மாதங்கி யானவள்;
மதங்க மாமுனியின் மகளுமானவள்,
அன்னை காளியின் கரும்பு வில்லானவள்;
காளிதாசனின் நாவில் நின்றவள்,
அறியும் அறிவும் அமைச்சு மானவள்;
அற்புத வீணையின் நாதமானவள்,
பச்சை வண்ண கோலம் கொண்டவள் ;
பாதை தருபவள் பாசம் கொண்டவள்,
அருளும் கரங்களில் அன்பை கொண்டவள்;
அன்னை அவளே சியாமளா தேவி
Comments
Post a Comment