அன்னை லஷ்மி
தாமரை மலராய் தங்க நிலவொன்று தவக்கோலம் காட்டி நிற்கும்,
தவழ்ந்து வானில் வலம் வந்து வாசல் வழியினை திறந்து நிற்கும்,
கண்கள் கண்டதும் தாயவள் புன்னகை மலர்ந்து மனம் நிறைக்கும்,
மண்ணில் மலர்ந்த கால்களில் பணிந்தே கரங்கள் வணங்கி நிற்கும்,
இருண்ட இல்லம் தாய் தந்த ஒளியால் பொன்னாய் மலர்ந்திருக்கும்,
அன்னை அவள் தந்த ஆனந்த வெள்ளம் உள்ளம் நனைத்திருக்கும்,
ஊரும் உறவும் உலகம் மகிழ ஒன்றாய் இணைந்திருக்கும்,
உன்னைக் கண்டதும் தாயே லட்சுமி கண்கள் பனித்திருக்கும்
Comments
Post a Comment