மாரி அவள் கோலம்
பட்டு சேலை பன்னீர் மாலை பார்க்க கண்வேணும்,
பாதை தெரியா தவிக்கும் எங்கள காக்க நீ வேணும்,
தங்க நகையும் மஞ்ச முகமும் மாரி அவ கோலம்,
தவிக்கும் மனசு துடிக்கும் உசுரு பாப்பது எக்காலம்,
வேலும் சூலமும் கண்ணுல கோவமும் காக்கும் எந்நாளும்,
வேண்டி நின்னோம் ஓட்டிரு தாயே நோய இந்நாளும்,
வேப்பில சட்டி தீய கொட்டி நடப்போம் முன்னால,
வேதனை யில்ல சோதனை யில்ல தாயவ கண்ணால,
மாரி உன்னால மழையும் தன்னால,
உலகம் உன்னால மாறிடும் தன்னால,
Comments
Post a Comment