தெளிந்த காவிரிதான்
காற்றின் ஒலியில் கற்பனை கலந்து கானம் தந்தது யார்?
பேசும் மொழியில் பாசம் கலந்து பாடல் தந்தது யார்?
ராம நாமத்தை ராகத்தில் நனைத்து' விந்தைகள் செய்தது யார்?
விடியற் காலையில் வீதியின் கோலம்' இசையால் வரைந்தது யார்?
இன்னிசை தந்தது யார்?இசையாய் வாழ்ந்தது யார்?
பிறந்தால் முக்தி தந்த ஊரில்' பிறந்த (தியாக) ராஜர் தான்,
ஐயாற ப்பன் அன்பால் அழைத்து' அணைத்த(தியாக) ராஜர் தான்,
பஞ்ச நதிகளின் பாசத்தில் வளர்ந்த பாடும் பறவை தான்,
பட்டா பிசேக ராமர் புகழை ராகத்தில் தந்தவர் தான்,
தேனாய் இனிக்கும் கீதத்தின் ஒலியை தேடித் தந்தவர் தான்,
தேகம் கரைந்து உணர்வில் தெளிந்து ஸ்ரீராமனை கண்டவர் தான்,
தெளிந்த ஓடையாய் காவிரி தந்த தீரா அமுதம் தான்,
திகட்டா இனிப்பாய் இன்னிசை தந்த தியாக ராஜர் தான்,
தெளிந்த காவிரிதான்,அவர் தியாக பிரம்மம் தான்
Comments
Post a Comment