அன்னை காளி

கல்லும் மண்ணாய் கரைந்து ஓடும் ஆற்றின் வெள்ளத்திலே,

காலத்தின் வலியும் காட்சியில் மாறும் காளியின் அருளாலே,

தீயாய் எரிந்து மேலே உயர்ந்து வீழும் மழைபோலே,

கண்ணால் எரித்து இதயம் குளிர்ந்து காப்பதும் தாயவளே,

எரியும் திரியில் எண்ணை வளர்த்து ஒளிரும் தீபம் போல்,

ஏங்கும் இதயத்தை இதமாய் தடவி காத்திடும் கரமவளே,

சிவப்பு ஆடையும் மாலையும் சூலமும் சூடிட நின்றவளே,

சிறிதும் இல்லை கவலை இல்லை காப்பாய் தாயவளே!

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்