வென்ற விநாயகன்
எத்தனை அழகிய கோலம் காண்பது
எங்கள் அருமை விநாயகன் தந்தது;
கற்பனை மீறிய காட்சி யானது
காணும் கண்களில் சாட்சி யானது,
தாயின் செல்லப் பிள்ளை யானது
தகப்பன் தந்த தலைதனை கொண்டது;
அரச மரத்தின் நிழலில் வாழ்வது
ஆறுதல் சொன்னது ஆயுள் தந்தது,
வேழ முகத்தால் வேதனை தீர்த்தது
வெற்றி மாலையை தோளில் கொண்டது;
கைதனில் காசுகள் காட்டி நின்றது
கருணை மழையாய் கொட்டித் தந்தது,
கங்கையை கண்களின் கருணை வென்றது
கால்கள் நிலைத்து பூமியை காத்தது;
அத்தனை கரங்களும் அன்பை சொன்னது
அம்மை யப்பனின் மகனாய் வென்றது
Comments
Post a Comment