அன்னை தேவி

ஆயிரம் மலர்கள் ஆளும் வண்ணங்கள் அன்னை மலர் முகமே,

ஆனந்தம் தந்திடும் ஆசிகள் வழங்கிடும் அன்னை திரு முகமே,

அன்னை அவள் முகமே,ஆனந்த பெரு வெள்ளமே,

நம்பிக்கை நாயகன் தும்பிக்கை யான் அவன் கொண்டது அவள் மடியே; 

தாயின் தலைமகன் தவளும் மடியே தாமரை யானதுவே,

தம்பி வேலவன் வேலுடன் அழகன் இடது மடியினிலே ;

செல்லப் பிள்ளை செல்வ குமரன் சேர்ந்ததும் தாயை மடியே,

அன்னை தேவி ஆசை குழந்தைகள் உலகின் நிலையிதுவே;

ஆளும் ஈசன் அன்னை சக்தி காக்கும் கதையிதுவே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்