அன்னை தாயே
இருண்ட வானை இதய சுமையுடன் பார்த்து நின்றேனே,
இருளின் கண்களும் இமையை திறக்க ஏங்கி நின்றேனே,
கனவை கலைத்து கண்கள் திறந்து காத்து நின்றேனே,
கண்ணின் நீர்துளி மண்ணை நனைக்க மயங்கி நின்றேனே,
எந்தன் விழிகளின் ஏங்கிய தவத்தால் ஒளியை கண்டேனே,
இருளை வென்ற ஒளியாய் தாயே உன்னை கண்டேனே,
ஒளியின் கரங்கள் இருளை விலக்கி காட்டும் உன் முகமே,
தாயின் விழிகளும் கரும்பு வில்லும் கண்டது புண்ணியமே,
தங்க முகமாய் தவழும் மதியாய் தாயை கண்டேனே,
தாயின் கருணை மழையில் நனைந்து தன்னை மறந்தேனே,
என்னை காக்க இறங்கி வந்தவள் உன்னை கண்டதுமே,
இதயசுமைகள் இறங்கி ஓடிட என்னை மறந்தேனே,
Comments
Post a Comment