கார்த்திகேயன்
காணும் கண்கள் பெறும் பேர் இதுவே;
கார்த்தி கேயன் அவன் காட்சியின் வடிவே,
கைகளில் வேலும் சேவற் கொடியும்
காக்கும் பொருளே கந்தனின் வடிவே;
கண்களின் ஒளியும் காவலன் கரங்களும் கண்முன் காட்டும் காவியம் இதுவே,
காதல் மனைவியர் கந்தனின் துணைவியர்
இணைந்து தோள்தரும் குமரனின் தேவியர்;
கூடிய கோலம் குமரனின் ஜாலம்
கண்களின் காட்சி கண்டது ஆட்சி,
கார்த்திகை பெண்களின் கரங்களின் பெருமை
கார்த்தி கேயன்அவன் காவலன் உண்மை;
வேர்கள் சொல்லும் விருட்சத்தின் பெருமை
வேலவன் காப்பது விடியலின் உண்மை
Comments
Post a Comment