குரு ராகவேந்திர
கண்கள் காணும் கனவிதுவா? இல்லை
வாழ்வது காட்டும் நனவிதுவா?
உணர்வில் தோன்றிய உயிரிதுவா?இல்லை உயிரில் தோன்றிய உணர்விதுவா?
மண்ணில் விளைந்த பொன்னிதுவா?இல்லை
பொன்னது மறைந்த மண்ணிதுவா?
வாழ்வது தந்தது தத்துவமா?இல்லை தத்துவ மானது வாழ்வதுவா?
என்னது? என்னது? என்னயிது?
எங்கள் குருவே என்னயிது?
உன்னை கண்ட கண்களிது, உண்மையில் புண்ணியம் செய்ததிது!
உன்னை தொழுத கரங்களிது,
உயர்ந்தது பண்பில் உள்ளமது!
உதட்டில் உனது நாமமது,
செவியது கேட்கும் கீதமது!
ராகவேந்நிரா!எனும் கீதமது,
இதயத்தில் இறங்கிய ராகமிது!
எங்கள் குருவின் ராகமிது,
ராகவேந்திரா!எனும் கீதமிது!
Comments
Post a Comment