அழகு முருகன்

 ராகம் : மலகரி  தாளம்:ரூபகம் 


கண்ணோ  அது கருணை மழையோ(ஸ ரி ம,,கரி/ஸரிகரிஸ//),

காணும் காட்சி நனவோ,

காண்பது வேலனின் முகமோ(ரிம பதமப/தப மகரிஸ//)


எத்தனை அமைதி உன்முகமே, 

ஏங்கும் விழிகள் என்னிடமே(மப தஸஸரி/ரிஸ தபமப//)

விரலின் பிடியில் வேலிருக்க,

வேறெது வேண்டும் காத்திருக்க(ரிம பதமப/தப மகரிஸ//)


தோளின் மாலை மனமே,

தோழன் உந்தன் உளமே(மப தஸஸரி/ரிஸ தபமப//)

காவி காட்டும் நிறமே,

கந்தன் வெற்றிக் கொடியே(ரிம பதமப/தப மகரிஸ//)


என்னே அழகு முருகா,

மண்ணை காத்திடு மருகா(மப தஸஸரி/ரிஸ தபமப//)

நீயே துணையாய் வருவாய், துன்பம் நீக்கி அருள்வாய்(ரிம பதமப/தப மகரிஸ//)

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்