பறந்தோடி வந்த விட்டல்லா
கண்ணாற உனைக் கண்டேன் விட்டல்லா,என் கண்ணாற கண்டேன் விட்டல்லா,
திரு நாமம் அலங்காரம் திரு மாலின் அவதாரம்
பூமாலை தோள் கொள்ள கண்டேன் உனை விட்டல்லா,
பறந்தோடி வந்தேன் விட்டல்லா,
பக்தன் தன் பசியாற; கண்ணாலே உனைக் காண ;
பண்டரிபுரம் நின்ற; பரந்தாமன் கால் பணிய ;
வந்தேன் விட்டல்லா,
நதியோரம் நீராடி ;
தாய் தந்தை பசியாற்றி; பணிசெய்யும் பக்தனவன்; கண்முன்னே காட்சி கொண்ட ;
கண்ணா உனை நான் காண ;
பறந்தோடி வந்தேன் விட்டல்லா,
பரந்தாமன் பலராமன் ;பார் காத்த யதுவீரன்; பண்டரிபுரம் தந்த பாண்டுரங்கன் உனைக் காண ;
பறந்தோடி வந்தேன் விட்டல்லா!
Comments
Post a Comment